ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் : முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

dmk cmmkstalin mothertongueday
By Irumporai Feb 21, 2022 05:18 AM GMT
Report

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் உலகத் தாய்மொழி தினம் பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் , உயர்தனிச் செம்மொழியாம் நம் தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும் பலரும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.