தேர் விபத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை செல்கிறார்..!
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்திக்கவிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இன்று காலை 11.30 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து தஞ்சாவூர் செல்கிறார்.
இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்து பற்றி தமிழக சட்டசபையில் அனைத்து கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் அளிக்கிறார்.