முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார்
M K Stalin
Madurai
By Thahir
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மதுரை பயணம் செல்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு செல்ல உள்ளார்.
இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விமானம் மூலம் இன்று மதுரை பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மேலும், அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் மரியாதை செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.