துபாயை தொடர்ந்து முதலமைச்சர் அடுத்த வெளிநாட்டு பயணம் எங்கு தெரியுமா?
தமிழக முதலமைச்சரின் அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த வாரம் துபாய் சென்றிருந்தார். அங்கு தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அன்று செல்வதாக கூறியிருந்தார். அதன்படி பல நாட்டு தொழிலதிபர்களுடன் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
4 நாட்கள் பயணமாக துபாய் சென்ற அவர், இரு நாட்கள் துபாயிலும் 2 நாட்கள் அபுதாபியிலும் இருந்து பல தொழில் முதலீட்டாளர்களை சந்தித்தார். இந்த பயணத்தில் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ரூ.6100 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்ததாகவும், இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கும் செல்லவிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அந்தந்த நாடுகள் முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் சுற்றுப் பயணம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியுள்ளார்.