“திராவிட மாடல் 2.0ல் பல மடங்கு பெருகட்டும்”- மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

M K Stalin
By Pavi Jan 15, 2026 06:10 AM GMT
Report

தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து 

தமிழர்கள் தைப் பொங்கல் திருநாளை கொண்டாடும் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இந்த மகிழ்ச்சி மேலும் பெருகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழர்கள் வீடுகளில் புத்தரிசி பொங்கல் வைத்து வழிபாடுகளை செய்தனர், உழவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவித்தனர்.

“திராவிட மாடல் 2.0ல் பல மடங்கு பெருகட்டும்”- மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து | Cm Mk Stalin Tamilar Pongal Wishes On 2026

ஸ்டாலின் தனது இணையதளத்தில் “புது பானையில் பொங்கல் செய்து செங்கரும்பை சுவைத்து, செங்கதிரவனை போற்றி தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்.

இந்த மகிழ்ச்சி திராவிட மாடல் 2.0ல் பல மடங்கு பெருகட்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு திமுக அரசு பல நலத்திட்டங்களை, குறிப்பாக பெண்களுக்கான திட்டங்களை அறிமுகம் செய்தது.

“திராவிட மாடல் 2.0ல் பல மடங்கு பெருகட்டும்”- மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து | Cm Mk Stalin Tamilar Pongal Wishes On 2026

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக மீண்டும் ஆட்சி அமைப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசு, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.