‘’சீக்கிரமே தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும்’’ - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் நம்பிக்கை

mkstalin chiefminister trilliondollar
By Irumporai Nov 23, 2021 09:37 AM GMT
Report

கோவை கொடிசியா அரங்கில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு என்ற பெயரில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த மாநாட்டில் ரூ.34,723 கோடியில் 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 74835 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”5 வருடத்தில் சாதிக்க வேண்டியதை 6 மாதத்தில் சாதித்து இருப்பதாக தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர்.

‘’சீக்கிரமே தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும்’’  - முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் நம்பிக்கை | Cm Mk Stalin Tamil Nadu Trillion Dollar

அனைத்து முன்கள பணியாளர்களும் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மக்களை காப்பதுதான் அரசின் பணி. இதில் இந்த அரசு மாபெரும் வெற்றி பெற்று இருக்கின்றது. 5 மாதங்களில் இது 3 வது முதலீட்டாளர் மாநாடு . அரசின் மீது நம்பிக்கை வைத்து தொழில் நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றனர்.

ஜூலை, செப்டம்பர், நவம்பர் என இரண்டு மாதங்களுக்கு ஒரு மாநாடு. இதே வேகத்தில் போனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக விரைவில் உருவாகும். பல மாநில முதல்வர்களில் நம்பர் ஒன் முதலமைச்சராக என் பெயரை சொல்கின்றனர்.

இது அரசுக்கு கிடைத்த பெருமையல்ல. மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. நம்பர் ஒன் தமிழ்நாடு என்று சொல்லும் வகையில் செயல்பட வேண்டும்.இந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 22 மாவட்டங்களில் முதலீடு மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் ஊர்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்பு ஏற்படுத்தபட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.

தமிழ்நாடு நிதி நுட்ப கொள்கை வெளியிடப்பட்டு இருக்கின்றது. நிதி நுட்ப நகரம் உருவாக்கப்படும். 2000 ல் கலைஞர் ஆட்சியில் டைடல் பார்க் துவங்கப்பட்டது. தகவல் தொழில் நுட்ப துறையில் அதன் தொடர்ச்சியாக தொழில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக டைடல் பார்க் ஏற்படுத்தப்படும். பொள்ளாச்சி பகுதியில் 21 கோடியில் தென்னை நார் பதப்படுத்தும் ஆலை அமைக்கப்படும். சென்னைக்கு அடுத்தபடியாக ஒரு தொழிலுக்கு என இல்லாமல் பல்வேறு தொழில்களுக்கு கோவை மையமாக இருப்பதாக கூறினார்.

கோவையில் தொடாத தொழில்கள் இல்லை. பாராட்டத்தக்க நகரமாக கோவை உருவாகி வருகின்றது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாநிலமாக கோவை இருக்கின்றது. தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவது வெகு தொலைவில் இல்லை.

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வருமென்ற நம்பிக்கை உள்ளது. வான்வெளி, பாதுகாப்பு துறையில் கோவை தொழில் துறையினர் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் தொழில வளர்சிசியை ஏற்படுத்த முடியும். திட்டங்கள் வெற்றி பெற தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அவர் தெரிவித்தார்.