'' நான் அதிகமாக பேசமாட்டேன்; செயலில் என்னுடைய பணி இருக்கும் '' - கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

dmk mkstalin Kovai
By Irumporai Nov 22, 2021 08:43 AM GMT
Report

கோவை, திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “எங்களுக்கு வாக்கு அளித்தவர்கள், வாக்கு அளிக்காதவர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றி வருகிறோம்.”  என பேசினார். 

மேலும், தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு மனிதனின் அரசாக திமுக அரசு இருக்கும் என கூறிய முதல்வர் சென்னை போல் கோவை மாநகர வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தர அரசு முடிவு செய்துள்ளதாகவும் கோவை விமான விரிவாக்க திட்டத்திற்கு ரூ 1132 கோடியை அரசு ஒதுக்கி உள்ளதாகவும்.

விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடரும் என கூறினார், மேலும் கோவை மாவட்டத்திற்கு லேட்டாக இருந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளதாக கூறிய ஸ்டாலின் நான் எப்போதும் அதிகமாக பேசமாட்டேன்; செயலில் என்னுடைய பணி இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ஆட்சியை அமைத்த அன்றே உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனித்துறையை உருவாக்கினோம். லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத மனுக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில் திட்ட சாலை பணிகள் மேற்கொள்ளவில்லை. மீண்டும் திட்ட சாலைகள் மேம்படுத்த உதவி செய்யப்படும். மாநகரில் உள்ள சிறைசாலை புறநகருக்கு கொண்டு செல்லப்படும். காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்” எனப் பேசினார்.