இலங்கைக்கு அரிசி,பால்பவுடர் உள்ளிட்ட நிவாரண பொருட்களை இன்று அனுப்பி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M. K. Stalin Tamil nadu Sri Lanka
By Thahir May 18, 2022 01:51 AM GMT
Report

சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று அரிசி,பால் பவுடர் உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கை செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்புகிறார்.

பொருளாதார நெருக்கடியால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது இலங்கை.அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்துள்ளனர்.

இலங்கைக்கு அரிசி,பால்பவுடர் உள்ளிட்ட நிவாரண பொருட்களை இன்று அனுப்பி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Cm Mk Stalin Sending Relief Items To Sri Lanka

அவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி,ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர்.

ரூ.28 கோடியில் 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாட்டின் பேரில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மாலை 5 மணிக்கு சென்னை துறை முகத்தில் இருந்து இலங்கை கொழும்பு துறை முகத்திற்கு ‘டான் பின்-99’ கப்பல் புறப்படுகிறது.

இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார். இதில் அமை ச்சர்கள், எம்.பி., எம். எல்.ஏ.க்க ள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.