தமிழ்நாட்டின் ஊர்தி, மாணவர்களையும் ஈர்த்துள்ளது : மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

cmmkstalin selfiwithstudents
By Irumporai Feb 21, 2022 08:45 AM GMT
Report

மெரினாவில் சுதந்திரதின  ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெசெல்ஃபி எடுத்துக் கொண்டது பெரும் மகிழ்ச்சி என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவி்த்துள்ளார்.

இந்திய விடுதலை போரில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட து.

விடுதலைப் போரில் தமிழகம் என்ற இந்த அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுக்க செல்லும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மூன்று அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த்து அதனை  பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன்  கண்டுகளித்து கொண்டிருந்தனர்.

அப்போது மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கண்டு, தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி, மாணவர்களுடன் கலந்துரையாடி, செல்ஃபி எடுத்துக் கொண்டார். 

மேலும், குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது .

பெரும் மகிழ்ச்சி எனவும் தமிழ்நாடு வெல்லும் என  முதலவர்  ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.