பிரதமரை மேடையில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது திமுகவின் மட்டமான செயல் - கிஷோர் கே சாமி
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தந்து 31 ஆயிரம் மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் பிரதமரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடினார். இந்த நிலையில் ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு கிஷோர் கே சாமி பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,திமுக சட்டமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா தாக்கல் செய்தது. அந்த மசோதா குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்து விட்டார்.
நீங்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம் அல்லவா.எதற்கு நடுவில் பிரதமர் என்றார். நீட் தேர்வுக்கு ஆதரவாக இருக்கும் பிரதமரிடம் நீட் தேர்வுக்கு விலக்கு கொடுங்கள் என்று கேட்பீங்களா?
நீங்கள் சிறுபான்மையினர் வாக்குகளை பெறவும் பிரதமர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பதை காட்டுவதற்காக அரசியல் செய்வதாக தெரிவித்தார்.
திமுக மட்டமான அரசியல் செய்கிறது என்று கிஷோர் கே சாமி தெரிவித்தார்.முழு வீடியோ காட்சியை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்