கேரளாவில் டென்ஷனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்..!
இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் மாநிலங்களை காக்க வேண்டும் என கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி கேரள மாநிலம் கண்ணூரில் தொடங்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது ஆண்டு மாநில மாநில மாநாடு நாளை நிறைவடைகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று முதலமைச்சர் சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கண்ணூருக்கு சென்றடைந்தார். அங்கு அவரை விமான நிலையம் சென்று கேரள மாநில அமைச்சர்கள் வரவேற்பு கொடுத்தனர். அப்போது விழாவில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
பின்னர் மாநாட்டில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை அழித்து ஒற்றைத்தன்மையை நிலைநாட்ட நினைப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி, ஒரே மதம் என மாற்ற மத்திய பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் மாநிலங்களை காக்க வேண்டும்.
பாஜக அரசு மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்கிக்கொண்டு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கேரள முதல்வர் பினராயி விஜயனும் நானும் தலையாட்டி பொம்மைகளாக இருந்து இருந்தால் நம் ஆட்சிக்கு பாஜக எந்த நெருக்கடியையும் தந்திருக்க மாட்டார்கள் என மு.க.ஸ்டாலின் பேசினார்.