முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தமிழகம் உள்ளிட்ட 7 முதல் 8 மாநிலங்கள் மத்திய அரசு அறிவுறுத்தியும் வாட் வரியை குறைக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர்,முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அவர் இந்த கருத்தை எடுத்துச் சொல்லியிருப்பதாக தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது கச்சா எண்ணெய்யின் விலை பெரும் அளவு சரிந்த போது அதற்கு ஏற்றாற்போல் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்காமல்,
அந்த எண்ணெய் விலை வீழ்ச்சி மூலம் கிடைத்த உபரி வருவாய் மூலம் தனதாக்கி கொண்டது ஒன்றிய அரசு, பெட்ரோல்,டீசல் மீது விதிக்கப்படக்கூடிய கலால் வரியானது மாநில அரசுகளோடு பகிர்ந்தளிக்க கூடியது என்ற காரணத்தால் அதனை குறைத்து மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வருவாயில் கை வைத்தது ஒன்றிய அரசு.
பெட்ரோல்,டீசல் மீது விதிக்கப்பட கூடிய ஒற்றை வரி மற்றும் தலைமேல் வரியும் மாநில அரசுகளுடன் பகிர்ந்தளிக்க தேவையில்லை என்பதால் இந்த வரிகளை கடுமையாக உயர்த்தி மக்களின் மீது சுமையை திணித்து அதன் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடி வருவாயை தனதாக்கி கொண்டது ஒன்றிய அரசு.
சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக பாசாங்கு காட்டுவது போல தேர்தலுக்கு முன்பாக அதிரடியாக பெட்ரோல்,டீசல் மீது விதிக்கப்படும் வரிகள் குறித்து வேடம் போட்டது என்றார்.
மேலும் மாநில அரசு தேர்தல் முடிந்த பிறகு அடுத்த வாரம் முதல் மடமடவென விலையை முன்பு இருந்ததை விட உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தும் ஒன்றிய அரசு.
தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு மக்கள் நலனை கருதி,நிதி நிலைமையை பொருட்படுத்தாமல் ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பாகவே பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியை குறைத்தது தமிழக அரசு.
இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.யார் பெட்ரோல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்,யார் பெட்ரோல் விலையை குறைப்பது போல் நடிக்கிறார்கள்,பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுவதாக கூறினார்.