நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைய பாடுபடுங்கள் - தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!
வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் முழுமையான வெற்றியை அடைய தொண்டர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளான ஜுன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள்,தெருமுனை கூட்டங்கள் நடத்தி கழக ஆட்சியின் சாதனைகளையும்,கழகத்தில் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
கழக ஆட்சி அமைந்த ஓராண்டில்,இவையெல்லாம் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்பட வேண்டும். தேர்தல் வாக்குறுதில் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் அரசின் நிதி நிலைமை மேம்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னாள் இருந்ததை விட இப்போது மக்களிடையே நமக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது.
திராவிட மாடல் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல,மற்ற மாநிலங்களிலும்,இந்தியா முழுவதும் பரவி விட்டது என்றார்.
மேலும் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது.
அத்தேர்தலில் முழு வெற்றியை பெற தொண்டர்கள் கனமாக செயல்பட வேண்டும் என்றார்.