சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!
நார்வே செஸ் ஓபன் போட்டியில் குரூப் ஏ பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நார்வே செஸ் ஓபன் போட்டி
நார்வே செஸ் ஓபன் போட்டியுடன் இணைந்து குரூப் ஏ பிரிவுக்கான போட்டியும் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 3ம் இடம் பிடித்தார்.
குரூப் ஏ பிரிவுக்கு நடைபெற்ற போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற பிரக்ஞானந்தா, இந்திய வீரர் பிரனீத்தை தோற்கடித்து 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.
முதலமைச்சர் வாழ்த்து
இதையடுத்து, அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் @rpragchess, தற்போது #NorwayChess தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார்.
— M.K.Stalin (@mkstalin) June 11, 2022
வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்! https://t.co/fGt7NJGeNq