தஞ்சையில் துார்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தஞ்சாவூர் மாவட்டம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துார்வாரும் பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு துார்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு துார்வாரும் பணிகளுக்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 683 பணிகள், 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு நடைபெற்று வருகிறது.

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் 1,356 கிலோ மீட்டர் நீளத்துக்கு 170 பணிகள் நடைபெற்று வருகிறன.
இந்த பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு உயர்அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.