திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு - பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு..!
திருவாரூரில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் இதில் பீகார் துணை முதலமைச்சர் தேஜஷ்வி யாதவ் பங்கேற்பு.
ரூ.12 கோடி மதிப்பில் கலைஞர் கோட்டம்
மறைந்த திமுக தலைவர் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்ட கட்டடம் 7 ஆயிரம் சதுர அடி பரபரப்பளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நுாலகம் , திருமண மண்டங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள இசையுடன் தொடங்கியது
இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார்.
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது.
முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அதில் பா.விஜய், கபிலன், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதை தொடர்ந்து சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
பின்னர் கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் அப்போது பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உடனிருந்தார்.