"கெத்தா நடந்து வர்றார்” - துபாயில் கோட் சூட்டில் மாஸ் காட்டும் மு.க.ஸ்டாலின்
துபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கோட் சூட்டில் அதிகாரிகளை சந்திக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
துபாயில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி உலக எக்ஸ்போ கண்காட்சி தொடங்கியது. அந்த கண்காட்சி மார்ச் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மார்ச் 25 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு வார நிகழ்வுகளை தொடங்கிவைத்து தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றார்.
MK. Stalin will meet the non-resident Tamils during his visit. The TN stall will feature various highlights of the state such as industries, tourism, apparels, Tamil development, industrial parks, IT developments and so on.#TNCMStalinInUAE #MKStalin pic.twitter.com/zZMEALafbP
— Saimanraj?❤ (@Saimanrajs) March 25, 2022
இதனை முன்னிட்டு எப்போதும் வெள்ளை வேஷ்டி சட்டையில்தான் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மு.க.ஸ்டாலின் துபாய் கிளம்பும் போது சிவப்பு நிற சட்டை கறுப்பு நிற பேண்ட் அணிந்திருந்தார். இதனுடன் கறுப்பு நிறத்தில் வெள்ளை நிற கோடுகள் போட்ட ஸ்டைலான கோட் அணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் முதலீட்டாளர்களையும், வெளிநாடு வாழ் தமிழர்களையும் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே துபாயில் கோட் சூட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த உடையில் முதலமைச்சர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் என தெரிவித்து வருகின்றனர்.