டெல்லியிலும் வாக்கிங் நடுவே செல்ஃபி வைரலாகும் முதல்வரின் நடைபயிற்சி

cmmkstalin nehrupark stalinmorningwalk
By Irumporai Apr 02, 2022 05:15 AM GMT
Report

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை டெல்லி நேரு பூங்காவின் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்ற நிலையில் தொடர்ந்து தமிழகத்திற்கு பல சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

என்னதான் பணி சுமை சுமை இருந்தாலும் உடற்பயிற்சி, நடைபயிற்சி உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் தவறாமல் செய்வார் . உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அவர், பல நேரங்களில் சைக்கிளிங் செய்வதையும் மறப்பதில்லை.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள கட்டப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திறப்பதற்காக நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர் இன்று காலை அங்குள்ள நேரு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

முதல்வர் ஸ்டாலினை பூங்காவில் கண்ட பொதுமக்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் செல்பி எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.