இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் - ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் !

Indian fishermen M K Stalin Tamil nadu
By Jiyath Jul 10, 2023 11:04 AM GMT
Report

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட 15 மீனவர்களின் விடுதலை குறித்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லாத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி 15 மீனவர்களை ஞயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் - ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் ! | Cm Mk Stalin Letter To Central Minister Prime 09  

அவர்களின் இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதனைத்தொடர்ந்து நீதி மன்றம் அவர்களை வரும் ஜூலை 21 ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 700 படகுகளை கரையிலேயே நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பபட்ட 15 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.

மு.கா.ஸ்டாலின் கடிதம்

இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார் அதில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட 15 மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் - ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் ! | Cm Mk Stalin Letter To Central Minister Prime 09

மீனவர்கள் தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சுமுகமான நடப்புறவு இருந்து வரும் இந்த நிலையில் தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமுக தீர்வினை எய்திடவும் இயலும்" என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.