சிகாகோவிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!
முதலீடுகளை ஈர்க்க 17 நாட்கள் அமெரிக்கப் பயணமாக சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிகாகோவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.
முதலமைச்சர்
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக,கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோ புறப்பட்டார்.அங்கு அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளுக்கு, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க, அழைப்பு விடுத்தார்.
மேலும் நோக்கியா, பே-பால் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதனை தொடர்ந்து, செப்டம்பர் 2ஆம் தேதி சான் பிராசிஸ்கோவில் இருந்து சிகாகோ புறப்பட்டார்.
அமெரிக்கப் பயணம்
அங்கு பிரபல பன்னாட்டு நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இப்படி 17 நாட்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சிகாகோவில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புறப்படுகிறார்.
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil
தடுப்புக் காவலில் உள்ள ஈஸ்டர் வழக்குடன் தொடர்புடையவர்கள்! 7-ஆவது குற்றவாளி நீதிமன்றில் பகிரங்கம் IBC Tamil
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil