காவல் நிலையத்தில் திடீர் விசிட் அடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ஆவடி மாநகராட்சியில் உள்ள அம்பத்துார் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிகுறவர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு சென்னை திரும்பினார்.
அப்போது காவல் ஆய்வாளரிடம் காவல் நிலையத்தை பார்வையிடலாமா என கேட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அறையில் அமர்ந்து காவலர் வார விடுப்பு மற்றும் எப்ஐஆர் பதிவுகளை ஆய்வு செய்தார்.
மகப்பேறு விடுப்பில் சென்ற பெண் காவலர் மகேஷ்வரி விடுப்பு குறித்து விவரங்களை காவல் உதவி பெண் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார்.
மேலும் காவல்நிலையத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கைதிகளின் அறைகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் காவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
முதலமைச்சரின் திடீர் ஆய்வால் காவல் துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயின.