மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Jul 25, 2022 04:04 AM GMT
Report

தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது 2021 - 2022 கல்வி ஆண்டுக்கான மிதிவண்டிகள் வழங்குவதற்காக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! | Cm Mk Stalin Inaugurates Free Bicycles To Students

6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்தாண்டு மாணவர்களுக்கு விலைவில்லா மிதிவண்டி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.