கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
75ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவண்ண கொடியை ஏற்றி வைத்தார் .
தமிழக காவல்துறையினரின் மரியாதையை ஏற்ற பின் கோட்டை கொத்தளத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிய பின் சிறப்புரையாற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் 2வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சரின் முக்கிய அறிவிப்புகள்
ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வு மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவர் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947.60 கோடி கூடுதல் செலவாகும்.
விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.
கடும் நிதிச்சுமைக்கு இடையே அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 01.07.2022 என்ற தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்.
சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால பங்கு குறித்து எடுத்துரைக்கப்படும்.