மன்னிப்பு கேட்டு,நஷ்ட ஈடாக ரூ.100 கோடி தரவேண்டும் - அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ்..!

DMK CM BJP Dubai MKStalin Annamalai மு.க.ஸ்டாலின் DubaiExpo R.S.Bharathi
By Thahir Mar 26, 2022 05:49 PM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்து பேசிய அண்ணாமலைக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு அனுப்பி உள்ள வக்கீல் நோட்டீஸ் விவரம்:

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும்,

உள்நோக்கம் கற்பிற்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.

முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது.

முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.