4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

mkstalin CSKvsKKR IPLFinal
By Petchi Avudaiappan Oct 15, 2021 07:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

துபாய் சர்வதேச மைதானத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் இடையே நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

சென்னை அணியின் வெற்றியை உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சென்னை அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கர்ஜித்துள்ளது. அணியின் வீரர்கள், ரசிகர்கள் என உலகம் முழுவதுமுள்ள சென்னை அணியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.