சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் : இது கழுத்தை நெறிக்கும் செயல் - முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

M K Stalin DMK
By Irumporai Jun 01, 2023 04:40 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உட்பட சிலரது ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டணம் தெரிவித்துள்ளார்.

 முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் :

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் : இது கழுத்தை நெறிக்கும் செயல் - முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் | Cm Mk Stalin Condemons Seemam Twitter

முதலமைச்சர் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது டுவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. டுவிட்டர் முடக்கத்தை விலக்கி சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.