பிரதமரின் வேண்டுகோளை அடுத்து DP-யை மாற்றிய முதலமைச்சர்
இந்தியா 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறது. சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மத்திய அரசு பல்வேறு நிகழ்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அதோடு சமூக வலைதளங்களில் ப்ரோஃபைல் பிச்சரில் தேசியக்கொடியை வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
DP-யை மாற்றிய முதலமைச்சர்
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தனது ப்ரோஃபைல் பிச்சரை மாற்றியுள்ளார்.

அதில், தமிழக சட்டமன்றத்தில் தேசியக்கொடி ஏற்றும் கொடிமண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நிற்பதுபோன்ற புகைப்படம் உள்ளது.
அதாவது சுதந்திர தினத்தன்று மாநில ஆளுநர்கள் அல்லாமல் முதலமைச்சரே தேசியக்கொடியை ஏற்றும் வகையில் உரிமையை பெற்றுத்தந்தவர் என்றும் அந்த கொடியை ஏற்றிவைத்த நிகழ்வையும் கொண்ட புகைப்படத்தை அவர் வைத்துள்ளார்.

இது தொடர்பாக புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர், என குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி IBC Tamil
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil