‘’ என்ன கண்ணா ஆன்லைன் கிளாஸ் எப்படி போகுது ‘’ - டீ குடித்தபடியே, சிறுவனிடம் ஆன்லைன் வகுப்பு குறித்து கேட்டறிந்த முதலமைச்சர்

viral schoolboy cycle cmstalin onlineclass
By Irumporai Jan 08, 2022 04:35 AM GMT
Report

தமிழகத்தின்  முதலமைச்சராக மு.க. ஸ்டாலின்  பதவியேற்றதிலிருந்து தீவிரமாக செயல்பட்டுவருகிறார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம்.  

இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

சைக்கிள் ஓட்டும் வீரர் அணியும் உடை, கையுறை, ஹெல்மெட் அணிந்து மு.க.ஸ்டாலின் சென்றபோதும், வழிநெடுகிலும் சாலையில் சென்ற பொதுமக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர்.

பலர் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். சாலையில் சைக்கிள் பயற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர் முதலமைச்சரின் சைக்கிள் ரைடை வீடியோவாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

அதே சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிளிங் சென்ற போது, வழியில் டீ குடித்தபடியே, சிறுவனிடம் ஆன்லைன் வகுப்பு குறித்து கேட்டறிந்தார் அந்த வீடியோவும் தற்போது வைரலாகிறது.