வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

M K Stalin
By Thahir May 21, 2022 04:31 AM GMT
Report

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்திய பாதுகாப்பு துறையின் உயர் அலுவலர்கள் பயிற்சி பெறும் வெலிங்டன் ராணுவ தலைமை பயிற்சி கல்லுாரிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருவது இதுவே இரண்டாவது முறை.

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! | Cm Mk Stalin At Wellington Military College

50 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி வெலிங்டன் ராணுவ கல்லுாரிக்கு சென்றுள்ளார்.

லெப்டினன்ட் ஜென்ரல் எஸ்.மோகன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இப்பயிற்சி கல்லூரியின் இராணுவ உயர் அதிகாரிகளை அறிமுகப்படுத்தி, பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும்,

கடந்த 75 ஆண்டு காலமாக நீலகிரிக்கும் வெலிங்டன் இராணுவ தலைமை பயிற்சிக் கல்லூரிக்கும் இடையே உள்ள உறவு குறித்தும் விளக்கினார்.

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! | Cm Mk Stalin At Wellington Military College

இச்சந்திப்பின்போது, நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் 12 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்வில்,

உடனடியாக நேரில் வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியதையும், தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கியதையும் நினைவுகூர்ந்து லெப்டினன்ட் ஜென்ரல் எஸ்.மோகன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர், முதலமைச்சர் பயிற்சி கல்லூரி இராணுவ உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிற்சி கல்லுாரியில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதி கையெழுதிட்டார்.