இதெல்லாம் நீங்கள் செய்யவேகூடாது : எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்

M K Stalin DMK
By Irumporai Mar 22, 2023 06:27 AM GMT
Report

சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை விவாதம்

தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று வேளாண்மை துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, நாளை முதல் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்க உள்ளது. வரும் வெள்ளிக்கிழமையும், 27ம் தேதியும் விவாதம் நடக்கிறது. 28ம் தேதி விவாத்திற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்கள்.

இதெல்லாம் நீங்கள் செய்யவேகூடாது : எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ் | Cm Mk Stalin Advice To Dmk Mla

29ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை நடக்கிறது. இந்த நிலையில் சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுகஎம் எல் ஏக்கள் கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியினர் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தார் .

அட்வைஸ் கொடுத்த முதலமைச்சர்

அதில் மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை சட்டப்பேரவையில் எவ்வாறு பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும், நடந்து கொள்ளும் விதம் குறித்தும், தேவையற்ற புகழ்ச்சி கூடாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். எதிர்க்கட்சிகள் என்றால் அவையில் விமர்சிக்கத் தான் செய்வார்கள் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வாறு விமர்சிக்கும் போது திமுக உறுப்பினர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், மூத்த அமைச்சர்கள் எதிர்க்கட்சியினருக்கு பதில் அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், என்ன பேச வேண்டுமோ அதனை அழுத்தம் திருத்தமாக பேச வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி வேண்டாம் என்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.