உலக முதலீட்டாளர்கள் மாநாடு: திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய பாய்ச்சல் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu
By Jiyath Jan 09, 2024 04:05 AM GMT
Report

திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் மாநாடு

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த மாநாட்டில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய பாய்ச்சல் - முதல்வர் மு.க.ஸ்டாலின்! | Cm Mk Stalin About World Investors Conference

இதன்மூலம் 27 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

மு.க. ஸ்டாலின் பெருமிதம் 

இருநாள் மாநாடு - 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு: திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய பாய்ச்சல் - முதல்வர் மு.க.ஸ்டாலின்! | Cm Mk Stalin About World Investors Conference

நமது திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும் - மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024! 'எல்லோருக்கும் எல்லாம்', 'எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி' என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!