என் மனைவி கோவிலுக்கு போவதெல்லாம் அவங்க விருப்பம் - முதலமைச்சர் ஸ்டாலின்!
துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது தனிப்பட்ட விருப்பம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கம்
சென்னை ஷெனாய் நகரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி கூட்டம் நடைபெற்றது. அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, பாராட்டுகளைபோல விமர்சனங்களையும் நான் விரும்புகிறேன்.
விமர்சனங்களில் தனிப்பட்ட நலனை விட பொதுநலன்தான் அதிகம் இருக்கும். எனவே அதை விரும்புகிறேன். திமுகவை கற்பனையில் கூட அழிக்க முடியாது. தமிழர்களை தலை நிமிர வைக்க பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.
ஆரிய ஆதிக்கத்திற்கு எதிரி
என் பேச்சை லைக் மட்டும் செய்யாமல் ஷேர் செய்யுங்கள். நெகட்டிவ் பிரசாரம் மூலம் பிறரை வீழ்த்த கூடாது. பாசிட்டிவ் பிரசாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
என் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். அதை தடுக்க நான் விரும்பவில்லை. திமுக ஆட்சியில் கோவில்கள் இடிக்கப்பட்டதாக தகவல்கள் பரவுகின்றன.
வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளம் மூலம் வதந்தி பரவுகிறது. 1,000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியுள்ளோம். கோவில் சொத்துகளையும் மீட்டெடுத்துள்ளோம். நாங்கள் ஆரிய ஆதிக்கத்திற்கு தான் எதிரியே தவிர, ஆன்மீகத்திற்கு அல்ல. எனத் தெரிவித்துள்ளார்.