முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுத் துறை செயலாளர்களுடன் 2வது நாளாக ஆலோசனை..!

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Jun 02, 2022 05:48 AM GMT
Report

அரசுத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் 2-வது நாளாக நடைபெறும் கூட்டத்தில் 19 துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுத் துறை செயலாளர்களுடன் 2வது நாளாக ஆலோசனை..! | Cm Mk Stalin 2Nd Day Meet Secretaries

திமுக ஆட்சி ஓராண்டு முடிந்த நிலையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்பாடு, தாமதத்திற்கான காரணம் குறித்து முதல்வர் கேட்டறிந்து பணியை விரைவுபடுத்த வலியுறுத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் கூட்டுறவு, உணவு , பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நான் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யும்போது பார்க்கிறேன்; மக்கள் நம் மீது அதிகமான அளவிற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.

அதனை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும் என அதிகாரிகளிடம் முதலமைச்சர் கூறியிருந்தார்.