முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுத் துறை செயலாளர்களுடன் 2வது நாளாக ஆலோசனை..!
அரசுத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 2-வது நாளாக நடைபெறும் கூட்டத்தில் 19 துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
திமுக ஆட்சி ஓராண்டு முடிந்த நிலையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்பாடு, தாமதத்திற்கான காரணம் குறித்து முதல்வர் கேட்டறிந்து பணியை விரைவுபடுத்த வலியுறுத்தி வருகிறார்.
இந்த கூட்டத்தில் கூட்டுறவு, உணவு , பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நான் பல மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யும்போது பார்க்கிறேன்; மக்கள் நம் மீது அதிகமான அளவிற்கு, மிகப் பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.
அதனை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும் என அதிகாரிகளிடம் முதலமைச்சர் கூறியிருந்தார்.