கள்ளச்சாராயம் குடித்து மருத்துமனையில் சிசிச்சையில் உள்ளவர்களை சந்தித்து முதலமைச்சர் நலம் விசாரிப்பு

M K Stalin Government of Tamil Nadu
By Thahir May 15, 2023 09:22 AM GMT
Report

விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் உடல் நலம் பாதிப்போடு அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

9 பேர் உயிரிழப்பு 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கள்ளச்சாராயம் விற்றதாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், கள்ளச்சாராய விற்பனை செய்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் 

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற விழுப்புரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்பகல் செல்வதாக செய்திகள் வெளியாகின.

cm-mk-stalim-meet-with-spurious-liquor-drinkers

இதையடுத்து முன்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருவோருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.