முதல்வருடன் சந்திப்பு : ரசிகர்களுக்கு ஸ்டிரிக்ட் உத்தரவு , விஜயின் அடுத்த நகர்வு என்ன?

vijay cmstalin vijaywarns
By Irumporai Apr 07, 2022 04:48 AM GMT
Report

நடிகர் விஜய் முதலமைச்சர் சந்திப்பு இணையத்தில் வைரனான நிலையில், நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு நேற்று இரவு திடீரென கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார் அந்த உத்தரவில் என்ன இருக்கிறது அதனை பார்க்கலாம் .

சென்னையில் ஏஜிஎஸ் சினிமாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் கல்பாத்தி எஸ் அகோரம் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில் பல முன்னணி பிரபலங்கள், அரசியல்வாதிகள் திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் நடிகர் விஜய். இதே நிகழ்வில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வரும் போது அவரை நடிகர் விஜய் சந்தித்தார். ஸ்டாலின் அருகே சிரித்தபடி சென்று அவரிடம் விஜய் கை குலுக்கினார்.

எப்படி இருக்கீங்க சார் என்று கேட்டு விஜய் ஸ்டாலினிடம் விசாரித்தார். பதிலுக்கு விஜயை முதல்வர் ஸ்டாலினும் நலம் விசாரித்தார். இதையடுத்து எம்எல்ஏ நடிகர் உதயநிதியை நடிகர் விஜய் சந்தித்தார். இந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரங்களில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் யாரையாவது இழிவுபடுத்தும் வகையில் பேசக்கூடாது என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

அப்படி பேசினால் அவர்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவதோடு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் விஜய் சார்பில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

அரசு பதவிகளில் உள்ளவர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்தத் தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது.

இது நம் தளபதி விஜய் அவர்களின் கடுமையான உத்தரவின்பேரில் ஏற்கனவே பலமுறை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். அதனை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொண்டதோடு இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம்.

இருப்பினும் நம் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலை மீண்டும் யாரேனும் மீறினால் இனி அவர்களை இயக்கத்தை விட்டு நீக்குவதோடு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தளபதி விஜய் அவர்களின் உத்தரவின் பெயரில் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அறிவிப்பிற்கும் முதல்வரை விஜய் சந்தித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே அவரின் ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அந்த சந்திப்பு மிகவும் நன்றாக இருந்தது.. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இப்போது புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டு இருக்கும் அறிக்கை வேறு காரணங்களுக்காக வெளியிடப்பட்டது என்று கூறப்படுகிறது.

அதாவது கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களுக்கும் நடிகர் அஜித் ரசிகர்களுக்கும் இணையத்தில் கடுமையான மோதல் ஏற்பட்டது.மாறி மாறி இரண்டு தரப்பும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி மோசமான டிரெண்டுகளை மேற்கொண்டு வந்தனர்.

அதோடு இல்லாமல் சில விஜய் ரசிகர்கள் அரசியல் கட்சியினர் சிலரை கடுமையாக விமர்சனம் செய்தனர். அரசியல் ஈடுபாடு உள்ள விஜய் ரசிகர்கள் சிலர் அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சனம் செய்து வருகின்றனர். சில மூத்த தலைவர்களை கிண்டல் செய்து மீம்ஸ் கூட போட்டு வருகின்றனர்.

இப்படி அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்ய கூடாது என்று ஏற்கனவே விஜய் தரப்பு தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தது. ஆனால் அதையும் மீறி விஜய் ரசிகர்கள் பலர் இப்படி தொடர்ந்து இணையத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

இது விஜய் தரப்பிற்கு புகாராக சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்தே விஜய் ரசிகர்களுக்கு இந்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது அதே சமயம் இது விஜயின் ஆரோக்கியமான எதிர்கால அரசியல் நகர்வா ? அல்லது அமைதியான இயக்கதிற்கான முன்னெடுப்பா அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.