முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

M K Stalin Mamata Banerjee
By Thahir Nov 02, 2022 03:21 AM GMT
Report

இன்று சென்னை வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளார்.

மம்தா பானர்ஜி சென்னை வருகை 

நாளை (3ம் தேதி) சென்னையில் மேற்கு வங்க மாநில பொறுப்பு கவர்னர் இல.கணேசன் அவர்களின் அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மாலை சென்னை வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி | Cm Mamata Banerjee Will Meet Cm K Stalin Today

பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது, பாஜக பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மாநாடு, அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பு குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.