நாளை மதுரை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu Madurai
By Thahir Oct 28, 2022 06:44 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நாளை மதுரை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மதுரை செல்லும் முதலமைச்சர் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு செல்ல உள்ளார்.

இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விமானம் மூலம் நாளை மதுரை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நாளை மதுரை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Cm M K Stalin Will Go To Madurai Tomorrow

இதனை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மேலும், அங்குள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் மரியாதை செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.