தமிழ்நாடு வெல்லும்..! வாக்களித்த பிறகு முதல்வர் மு.க ஸ்டாலின் கருத்து
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த பின் தமிழ்நாடு வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெல்லும்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று அதிகாலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து தன்னுடைய வாக்கினை செலுத்தினார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன், மனைவி துர்கா, மகனும் துணை முதல்வருமான உதயநிதி அவரது மனைவி கிருத்திகா ஆகியோரும் தங்களுடைய வாக்கினை செலுத்தியுள்ளனர்.
தனது ஜனநாயக கடமையை செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க ஸ்டாலின், “ ஒரே வார்த்தையில் சொல்கிறேன், தமிழ்நாடு வெல்லும். என்னை போன்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் தங்கள் ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.