இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் தோழர் நல்லக்கண்ணு - முதலமைச்சர் வாழ்த்து

M K Stalin
By Thahir Dec 26, 2022 07:44 AM GMT
Report

இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தகாரர் தகைசால் தமிழர தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு 98 வயது பிறந்தநாள் வாழ்த்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து 

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு அவர்கள் இன்று தனது 98-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தி.நகரில் உள்ள நல்ல கண்ணு அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Chief Minister M. K. Stalin

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆங்கிலேய ஆட்சிக்காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்; ‘தகைசால் தமிழர்’ தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்!

Chief Minister M. K. Stalin

தொண்டுக்கு இலக்கணம்! தியாகத்தின் இலக்கியம்! கொள்கையின் மரு உரு! உழைப்பின் திரு உரு! அய்யா நல்லகண்ணு இன்றைய தமிழ்நாட்டின் ஈடு இணையில்லா வழிகாட்டி! நீடூழி வாழ்ந்து இந்த நாட்டுக்கு வழிகாட்ட வாழ்த்துகிறேன்! என பதிவிட்டுள்ளார்.