கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக NIA விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Oct 26, 2022 09:36 AM GMT
Report

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

கார் வெடிப்பு சம்பவம் 

கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று வெடித்து சிதறியது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி பலியானார். பின்னர் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர்.

Chief Minister M.K.Stalin recommendation to investigate NIA

இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக கோவையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்,

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Chief Minister M.K.Stalin recommendation to investigate NIA

NIA விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரை 

இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்.

Chief Minister M.K.Stalin recommendation to investigate NIA

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை, உக்கட்ம் பகுதியில் 23-10-2022 அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் பொதுவான சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் விரிவான ஆய்வுக்கு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை குறித்தும், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பினை மேலும் உறுதி செய்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுபோன்ற சம்பவங்களின் விசாரணையில் மாநிலம் தாண்டிய பரிணமாங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரை செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகரின் பாதுகாப்பினை மேலும் வலுப்படுத்திட கரும்புக் கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய 3 பகுதிகளில் புதிய காவல் நிலையங்கள் உடனடியாக அமைத்திடவும்

மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில், காவல்துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்கிடவும்

கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்பு கேமராக்களை விரைவில் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்

மாநிலத்தின் உளவுப் பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்திடவும்

இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைப் பற்றியும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.