மருத்துவமனை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
M K Stalin
By Thahir
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முதுகு வலி காரணமாக மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற நிலையில் வீடு திரும்பினார்.
முதுகு வலி காரணமாக உடல் பரிசோதனை மேற்கொள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர் சென்றார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
முதலமைச்சருக்கு முதுகு வலி இருந்ததால் வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.