மழை நீர் வடிகால் பணிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் மழைக்கால வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் நேரில் ஆய்வு
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 4-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும்,இயல்பை ஒட்டியே மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னையில் ரூ.608 கோடி செலவில், 179 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால், வெள்ள தடுப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பிராட்வே என்எஸ்சி போஸ் சாலை, வால்டாக்ஸ் சாலைகளில் நடைபெறும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி, மேயர் பிரியா,ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.