இயக்குநர் பாராதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin
By Thahir Sep 10, 2022 07:04 AM GMT
Report

மருத்துமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இயக்குநர் பாராதிராஜாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நலம் விசாரித்த முதலமைச்சர் 

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பினார்.

வயது முதிர்வு காரணமாக நுரையீரல் பாதிப்பால் சென்னை எம்பிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இயக்குநர் பாராதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Cm M K Stalin Inquired After Health Bharathiraja

அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் உடல் நலம் தேறியதை அடுத்து அவர் டிஸ்ஜார்ஜ் ஆனார்.

இந்த நிலையில் இன்று அவரின் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு, கவிஞர் வைரமுத்து, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.