முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிஸா வழக்கில் சிறைக்கு செல்லவில்லை - அண்ணாமலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிஸா வழக்கில் சிறைக்கு செல்லவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை குற்றச்சாட்டு
பாஜக கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று காரைக்குடியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் மற்றும் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேடையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர், பாஜகவின் தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது செய்கிறார்.
தன்னை எதிர்த்து குரல் கொடுத்தால் அவர்களை கைது செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி. ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.ராசா தாய்மார்களை நேரடியா கொச்சைப் படுத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்த பாஜகவினர் 107 பேரை 9 மாவட்டங்களில் காவல்துறை கைது செய்துள்ளது எங்கேயும் நடக்காத சர்வதிகார ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், முதலமைச்சர் சிறைக்கு செல்லவில்லை என்றார்.மீஸா வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை.
ஆனால் மீஸா வழக்கில் சிறைக்கு சென்ற மாதிரி பொய் சொல்லி அழைந்து கொண்டு இருக்குறீர்கள் என்று பேசியுள்ளார்.