கோவை கார் வெடிப்பு சம்பவம்; டிஜிபி, தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக டிஜிபி, தலைமைச் செயலாளருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலமைச்சர் ஆலோசனை
கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உடல் கருகி பலியானார். பின்னர் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீப்பற்றி எரிந்த காரை அணைத்தனர்.
இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றி உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக கோவையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.