சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி தாயார் மறைவு
சோனியா காந்தியின் தாயாரான பவ்லா மைனோ இவர் இத்தாலியில் வசித்து வருகிறார். இவரை காண கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி சோனியா காந்தி. ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூவரும் இத்தாலி சென்றனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 27-ம் தேதி அவர் காலமானதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் இத்தாலியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 30) நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் இரங்கல்
இந்த நிலையில் சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களின் தாயார் பாவ்லோ மைனோ இயற்கை எய்திய செய்தியறிந்து வேதனையுற்றேன்.
சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தனது அன்புத் தாயாரின் நினைவுகளில் ஆறுதலைக் காண்பராக என தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களின் தாயார் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/mzsDOcSzrZ
— TN DIPR (@TNDIPRNEWS) September 1, 2022