எலிசபெத் ராணி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

M K Stalin Queen Elizabeth II
By Thahir Sep 09, 2022 04:32 AM GMT
Report

எலிசபெத் ராணி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து ராணி எலிசபெத் நேற்று  உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு (96).

இவரது மறைவுக்கு உள்ள அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

எலிசபெத் ராணி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் | Cm M K Stalin Condolence Of Queen Elizabeth

அந்த ட்விட்டர் பதிவில், ‘ஐக்கிய இராச்சியத்தின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.

ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சி, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெதன் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

ராணி II எலிசபெத் தனது கண்ணியம், பொது வாழ்க்கையில் கண்ணியம் மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நீண்ட காலமாக நினைவுகூரப்படுவார். என் ஆழ்ந்த அனுதாபங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.