மோடி பெயரை சொன்னால் கணவரை பட்டினி போடுங்க - பெண்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள்!
டெல்லி பெண்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில், பெண்கள் கௌரவிப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அதில், “மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கும் ஆண்களை ஊக்குவிப்பது என்பது குடும்பத்தில் உள்ள பெண்களின் பொறுப்பு. பல ஆண்கள் பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்கிறார்கள். அதை உங்களால் மட்டுமே சரிசெய்ய முடியும்.
பிரதமர் மோடியின் பெயரை உங்கள் கணவர் கூறினால், அவரிடம் இரவு உணவு கொடுக்க மாட்டேன் என சொல்லுங்கள். கெஜ்ரிவால் தான் உங்களுக்கு மின்சாரத்தை இலவசமாக கொடுக்கிறார். இலவச பேருந்து பயணத்தை கொடுக்கிறார். இப்போது பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 கொடுக்கிறார்.
பாஜக கண்டனம்
பாஜக என்ன செய்தது? பின் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்? என அவர்களிடம் (கணவர்களிடம்) சொல்லுங்கள். பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் எடுத்துக்கூறி, ஆம் ஆத்மிக்கான ஆதரவை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் பர்ஸிலும் நான் ரூ. 1000 வைப்பேன்.
हज़ार रुपये में पूरे परिवार को ख़रीदना चाहता है दिल्ली का मालिक ?
— DEEWAN. (Modi Ka Parivar) (@Spoof_Junkey) March 9, 2024
क़सम तो तूने भी अपने बच्चों की खाई थी क्या हुआ? @ArvindKejriwal pic.twitter.com/FgKIEE7Ot6
காலியான பணப்பை அதிகாரத்தைக் கொடுக்காது” என தெரிவித்துள்ளார்.
தற்போது இவரது பேச்சுக்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.