திராவிட மாடலே இந்தியாவின் ஆட்சி மாடல் : திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

M K Stalin DMK
By Irumporai May 04, 2023 08:53 AM GMT
Report

திராவிட மாடலே இந்தியாவின் ஆட்சி மாடல் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

 திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் ,பல்வேறு வலியுறுத்தல்களையும், அறிவுறுத்தல்களையும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். முக்கியமாக, திமுக பொறுப்பேற்று இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இரண்டு ஆண்டு திராவிட மாடல் ஆட்சி சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக பிரமுகர்கள் பேசுகையில் கண்ணியத்துடன் கவனமாக பேச வேண்டும். ஏன் என்றால் சிலர் நமது பேச்சை வேண்டும் என்றே ஒட்டியும், வெட்டியும் பரப்பி விடுகின்றனர் என அறிவுறுத்தல்களை வழங்கினார். நாம் மக்களை நம்புபவர்கள். அவர்களிடம் நமது சாதனைகளை கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திராவிட மாடலே இந்தியாவின் ஆட்சி மாடல் : திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் | Cm K Stalin Has Written A Letter

 செப்டம்பர் 15இல் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், மக்களை மேம்படுத்தும் திட்டங்களை கொண்டு திராவிட மாடல் செயல்பட்டு வருகிறது . திராவிட மாடல் இந்தியாவின் ஆட்சி மடல் என்றும், சிலர் திமுகவை விமர்சித்து பேசினால் பெரியாளாக மாறிவிடலாம் என நினைக்கிறார்கள்

விடியல் ஆட்சி

இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும். திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்கான நற்சான்றிதழைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரலாறு படைக்கட்டும்,என்றும் அந்த கடிதத்தில் திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

   முன்னதாக ஆளுநர் ரவி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், திராவிட மடல் என்பது காலாவதியான ஐடியா என பேசியிருந்தார். அது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.